அதிகாரம் பெற்ற பெண், மகளிருக்கு அதிகாரம் அளிக்கிறார்.

மகளிருக்கு அதிகாரமளிப்பதைக் காட்டிலும் மேம்பாட்டுக்கான மிகவும்  முனைப்பான சாதனம் வேறெதுவும் இல்லையென நாங்கள் நம்புகிறோம். வாய்ப்புகளையும், வள ஆதாரங்களையும் அணுகுவதற்கு பெண்களுக்கு உதவி செய்வதன் வாயிலாக, அவர்கள், தங்களுடைய சுயமதிப்பை உணர்வதற்கு நாங்கள் முனைப்புடன் செயலாற்றி வருகிறோம். பயிற்றுவிப்பது, ஊக்கமளிப்பது மற்றும் அதிகாரமளிப்பது ஆகியவை எங்களின் தாரக மந்திரங்களாகும். இந்நிறுவனமானது, நுண் கடனுதவி, தொழில் பயிற்சி, தொழில் முனைவோருக்கான ஆதரவு போன்ற துறைகளில் இந்நிறுவனம் மகளிர் குழுக்களுடன் இணைந்து  பணியாற்றி வருகிறது.

சொர்ணம்மாள் கல்வி அறக்கட்டளை  வாயிலாக இந்நிறுவனமானது, மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள 6000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நீடித்த வாழ்வாதாரத்திற்கான கடனுதவி மற்றும் பயிற்சியை  வழங்கி, ஆதரவளித்து வருகிறது. இதன் மூலம் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தி, அவர்கள், பல்வேறு சவால்களை எதிர்கொள்ளக்கூடிய தன்னம்பிக்கையுடையவர்களாகச் செய்யக்கூடிய ஒரு அடித்தளத்தை அவர்களுக்கு அளித்துள்ளது.

ஆவடியில் மேற்கொள்ளப்படுகிற நடவடிக்கைகள்

  • முனைப்பான மகளிர் சுய உதவிக்குழுக்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் பொருளாதாரரீதியாக தற்சார்புடையவர்களாகவும், பிறர் உதவியின்றி தாமாக பணிகளை மேற்கொள்வதற்கும்  அவர்களை ஆயத்தப்படுத்துவதற்கு ஏதுவாக தையல் கலை, நவீன/அலங்கார நகைகளைத் தயாரித்தல், காகிதப் பைகளைத் தயாரித்தல் போன்ற நீடித்த வாழ்வாதாரத்திற்கான வாழ்க்கைத் தொழில் பயிற்சித் திட்டங்களைதொடர்ச்சியாக  மேற்கொண்டு வருகிறது. இந்த மனமார்ந்த முயற்சிக்கு ஆதரவு அளித்து வரும் சகோதர நிறுவனம் மற்றும் சத்தியபாமா பல்கலைக்கலைகழகத்துடன் நாங்கள் இணைந்து செயலாற்றி வருகிறோம்..
  • மகளிருக்காக பொருளாதாரம் பற்றிய கல்வியறிவு பயிற்சித் திட்டங்களை நடத்துதல் மற்றும் அவர்களை, தொழில் முனைவோர்களாக உயர்த்துவதற்கு ஊக்கமளித்தல்
  • வாழ்க்கைத் தொழில் திறன்கள் குறித்த பயிற்சித் திட்டங்களை தொடங்கி வைத்தல்– மாணவிகள் மற்றும் பெண்களை கணினி வழியில் திறன்மிக்கவர்களாக செய்வதற்கு, அவர்களுக்கு, கணினி பற்றிய கல்வியறிவு பயிற்சித் திட்டங்களை அளிக்கும் நோக்கத்துடன், டென்மார்க்கில் உள்ள சகோதர நிறுவனம் மற்றும் சென்னையிலுள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தின் மகளிருக்கு அதிகாரமளித்தல் அமைப்பின் உதவியுடன் மகளிருக்கு அதிகாரமளித்தல் குறித்த திட்டங்களைத் தொடங்குதல்
  • 387 பெண்களுக்கு நகைகள் செய்வதில் பயிற்சியளிக்கப்பட்டது. 10 பெண்கள் தையல் பயிற்சி வகுப்பு வாயிலாகப் பயனடைந்தனர் 74 பெண்களுக்கு மாடித் தோட்டக்கலையில் பயிற்சியளிக்கப்பட்டது.
  • 43 பெண்களுக்கு அடிப்படையான கணினி பயிற்சியும், 27 பெண்களுக்கு ஆங்கிலம் பேசுவதற்கும், எழுதுவதற்குமான பயிற்சி அளிக்கப்பட்டது.
  • மகளிருக்கு மட்டுமேயான திட்டங்கள் வாயிலாக 70 பெண்கள் பயனடைந்துள்ளனர். ( கணினி வழியில் வங்கிப் பணிகள், தியானப் பயிற்சி, ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் போன்ற பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது)
  • இந்த நிறுவனம் மூலம் ஓராண்டு கால அளவில் குறைந்தது 10 பெண் தொழில்முனைவோரையாவது உருவாக்கி அவர்களை மேம்படுத்துதல்

இந்தப்பயணத்தில் எங்களுக்கு தயவு கூர்ந்து ஆதரவு தாருங்கள்.