விளையாட்டிற்கு உலகையே மாற்றும் வல்லமை உள்ளது. அதற்கு ஊக்குவிக்கும் வல்லமையும் உள்ளது.வேறு எதனாலும் செய்ய முடியாத செயலான மக்களை இணைக்கும் சக்தியையும் தன்னகத்தே கொண்டுள்ளது.”

எந்தவொரு நாட்டினையும் போல, இந்தியாவும் தனது நாட்டின் விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெற்று நாட்டிற்கு பெருமை தேடித்தரும் வகையில் ஒலிம்பிக் பதக்கங்கள் வெல்வதற்கு விளையாட்டில் ஆர்வம் மிக்கவர்களுக்கு பயிற்சியளிக்கிறது. நமது நாட்டின் வருங்கால குடிமக்களின் பெற்றோர்கள்/ பாதுகாவலர்களாகிய நமது குழந்தைகள் நாம், விளையாட்டினை ஒரு வாழ்க்கைத் தொழிலாக எடுத்துக்கொள்ளும் வகையில் விளையாடும் பழக்கத்தை ஊக்குவிக்கத்தவறியதனால், பொதுவாகவே நாம் விளையாட்டின் மீது குறைந்த அளவே நாட்டம் கொண்டுள்ளனர். ஒரு உன்னதமான விளையாட்டு வீரரை உருவாக்க ஆண்டுக்கணக்கிலான கடின உழைப்பு, கடமையுணர்ச்சி மற்றும் உறுதி/விடாமுயற்சியும் தேவைப்படுகிறது.

திஷா விளையாட்டு அமைப்பு, விளையாட்டுக்களை மேம்படுத்துவதற்காக துவக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். இந்த அமைப்புபயிற்சியளித்து வீரர்களை உருவாக்குவதை நோக்கமாகக்கொண்டு தோற்றுவிக்கப்பட்டதாகும்.

இளம் பருவத்திலேயே விளையாட்டினை மையமாகக் கொண்ட ஒரு முழுமையான வளர்ச்சியை மாணவர்களுக்கு அளிப்பதையே இதன்  நோக்கமாகக்கொண்டுள்ளது.

திஷா விளையாட்டு அமைப்பு அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு குத்துச்சண்டை, கால்பந்து மற்றும் தடகளத்தில் பயிற்சி அளித்து வருகிறது. நாங்கள் மாணவர்களுக்கு விளையாட்டுப் பெட்டகங்கள் அளித்து பயிற்சியாளர்களைக்கொண்டு அவர்களது திறன்களை மேம்படுத்துகிறோம். மேலும், நாங்கள் சில பள்ளிகளில் விளையாட்டு மைதான வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளோம். தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் திறன் மிக்க  மாணவர்களை உருவாக்குவதையே எங்களது குறிக்கோளாகக்கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

எங்கள் அமைப்பின் நோக்கங்கள் வருமாறு:-

  • மாணவர்களிடத்தில் விளையாட்டுப்பழக்கவழக்கங்களை மேம்படுத்தி  முழுமையான வளர்ச்சியை வழங்குதல்
  • மாணவர்களை மனதாலும் உடலாலும் தகுதிப்படுத்தும் கோட்பாட்டினை உருவாக்குதல்
  • ஏழை மாணவர்களுக்கு கால் பந்து, குத்துச்சண்டை முதலியவற்றில் பயிற்சியளித்தல்

எங்களுடைய சாதனைகள்

  • 1250 மாணவர்களுக்கு கால் பந்து, குத்துச்சண்டை மற்றும் தடகளத்தில் பயிற்சி வழங்கப்பட்டது.
  • கடந்த 3 ஆண்டுகளில் குத்துச்சண்டையில் 3 தேசிய பதக்கங்களுடன் இரண்டு முறை  மாநில வாகையர் பட்டம்.
  • கால் பந்து மற்றும் தடகளத்தில் மாவட்ட வாகையர் பட்டம்.
  • மாவட்ட அளவில் 300 –க்கும் மேற்பட்ட பதக்கங்களுடன், மாநில அளவில் 150க்கும் மேற்பட்ட பதக்கங்கள் மற்றும் தேசிய அளவில் 10 பதக்கங்கள்
  • சந்தோஷ் கோப்பைக்கான தேசிய கால்பந்து வாகையர் போட்டியில் விளையாடுவதற்கு 3 விளையாட்டு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
  • சென்னைக்கோட்டத்தில் இரு அணிகள் முதுநிலை கால்பந்தாட்ட போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஆவடியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள்

  • ஆவடி, சத்தியமூர்த்தி நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு மைதானம் மற்றும் கையுந்து பந்து ஆடுகளம் ஏற்படுத்தப்பட்டது.
  • ஆவடி, காமராஜர் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வளை பந்து ஆடுகளம் ஏற்படுத்தப்பட்டது.
  • ஆவடி, காமராஜர் நகர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு மைதானம் ஏற்படுத்தப்பட்டது.
  • ஆவடியில் நகராட்சி மற்றும் அரசுப்பள்ளிகளில் 100க்கும் மேற்பட்ட ஆர்வம் மிக்க மாணவர்களைக்கண்டறிந்து குத்துச்சணடை மற்றும் கால்பந்தாட்டத்தில் அனைத்து வகையான பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.
  • ஆவடியில் பல்வேறு அரசுப்பள்ளிகளைச்சேர்ந்த 150 மாணவர்களுக்கு விளையாட்டுப்பெட்டகங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
  • கோடைகால விளையாட்டு முகாம் நடத்துதல்: சிறப்பாக அரசு பள்ளி மணவர்கள், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில்  (தடகள விளையாட்டு, குத்துச்சண்டை, கோ-கோ)   பங்கேற்று அதற்கு அவர்களைத் தகுதியுடையவர்களாக்கவும், அவர்களது  திறமையை  வளர்ப்பதற்க்காகவும் அவசியமான பயிற்சியளிப்பதக்காக கோடைகால விளையாட்டு முகாம் நடத்துதல்.
  • விளையாட்டுத் திடலைச் செம்மையாக்குதல்: அரசு பள்ளிகளின் (எஸ்.எம்.நகர், திருநின்றவூர், த.வீ.வ.வாரியம்)  விளையாட்டு திடல்களை சுத்தம் செய்தல் மற்றும்  சமநிலைப்படுத்தல் போன்ற அவசியமான செயல்களை மேற்கொண்டு  செம்மையாக்குதல்..

ஆவடியில், குறிப்பிட்ட விளையாட்டுகளை தொடர ஆர்வமுடைய மாணவர்களிடையே விளையாட்டு பழக்க வழக்கங்களை நல்ல முரையில் பயிற்றுவித்து, அதன் மூலம் ஆரோக்கியமான மாணவர்களையும், விளையாட்டு போட்டிகளில் வெற்றி வீரர்களையும் உருவாக்குவதே நம் நோக்கமாகும்.

இந்த செயல்பாடுகளுக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் நீங்களும் இந்த நன்முயற்சியில் பங்கேற்க  இயலும்.