புவியை வளமடையச் செய்வதன் மூலம், நாம் வளமடையலாம்

அனைத்து நிலைகளிலும் நடவடிக்கை எடுப்பது, வருங்காலத் தலைமுறையினருக்காக, நம் சுற்றுச்சூழலைப் பாதுகாத்துப் பேணுவதற்கான பயனுள்ள அமைப்புமுறை ஒன்றுக்கு வழி வகுக்கும் என இந்த  நிறுவனம் நம்புகிறது. இந்த நோக்கத்தைக் கருத்திற் கொண்டு, மா.ஃபா நிறுவனம், “பசுமை ஆவடி” என்ற திட்டத்தை தொடங்கியது. “பசுமை ஆவடி” என்பது, பசுமை செறிந்த (Green) ஆவடி என்று பொருள்படும்.  இதற்கான தொடக்கநிலை முயற்சிகள் பின்வருவனவற்றின் மீது கவனம் செலுத்துகிறது:

 1. சுற்றுச்சூழல் சார்ந்த கல்வி
 2. காடு வளர்த்தல் மற்றும் பராமரிப்பு
 3. நீர்நிலைகளைப் பாதுகாத்து பராமரித்தல்
 4. செம்மையான முறையில் கழிவு மேலாண்மை

இந்நிறுவனம், நீடித்த நிலையான மேம்பாட்டிற்கு அதாவது, தங்களின் சுய தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு, வருங்காலத் தலைமுறையினரின் திறனை விட்டுக் கொடுக்காமல், அதே சமயத்தில் தற்போதைய தலைமுறையினரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. சுற்றுச்சூழலை பாதிக்காவண்ணம் மேம்பாடு அமைய வேண்டும் என்ற உண்மையை வலியுறுத்துவற்காக, ‘ஆவடி பசுமை மாநகரங்கள் திட்டம்’ தொடங்கப்பட்டது.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது, ஒரு சமூக மற்றும் நெறிசார்ந்த பொறுப்பாகும்.  இயன்ற  அளவுக்கு சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த அடிச்சுவட்டினை ஏற்படுத்துவதற்கான திட்டபாடு ஒன்று நம்மிடம் உள்ளது.  இதை உறுதிப்படுத்தும் வகையில் மூன்று முறைகளை (3R’s) நாம் நடைமுறைப்படுத்தி பின்பற்றுவதன் வாயிலாக நாம், அதனை நிறைவேற்ற இயலும்.  அவை, மறுபயன்பாடு, மாசினைக் குறைத்தல் மற்றும் மறுசுழற்சி செய்தல் ஆகியவையாகும்.  நாம், சுற்றுச்சூழலை பாதுகாக்கவில்லையெனில், நம் வாழ்வாதாரத்தை நீடித்த வகையில் பாதுகாத்துக் கொள்ள இயலாது என்ற கருத்தைத் தெரிவிக்கும் உன்னதமான மற்றும் உண்மையான முயற்சி தான் ஆவடி பசுமை மாநகரங்கள் திட்டம் மற்றும் பசுமை ஆவடி திட்டமாகும்.

அனைத்து வகைகளிலும் ஆவடியை  மற்ற பகுதிகளைவிட சிறந்த பகுதியாக மாற்றுவதற்கு  தங்களின் மேலான ஆதரவு மற்றும் ஒத்துழைப்பை நாங்கள் எதிர்நோக்குகிறாம்.

எங்களுடைய பசுமை ஆவடி என்ற திட்டத்தின் நோக்கமானது ,ஆவடி மக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை  ஏற்படுத்துவதேயாகும். கல்வி நிலையங்களில் விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சிகளை நடத்தி வருவதுடன் , மாணவர்களில் தன்னார்வத்துடன் உள்ளோரை  எங்களுடைய செயல்பாடுகளான   நீர்நிலைகளைச் சீரமைத்தல் , மரக்கன்றுகளுக்கான நாற்றுப்பண்ணைகளை ஏற்படுத்துதல்  மற்றும் அவை தொடர்புடைய செயல்பாடுகளில்  பங்கேற்கச் செய்துவருகிறது.

ஆவடியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்.

தூய்மை செய்யப்பட்டு மீட்கப்பட்ட நீர்நிலைகள்

 1. பொன்னியம்மன் கோயில் குளம்
 2. சுண்ணாம்புக்குளம்
 3. தாமரைக் குளம்
 • நாசரேத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மரக்கன்றுகளுக்கான நாற்றுப்பண்ணைகள் அமைக்கப்பட்டது.
 • ஆவடியிலுள்ள பள்ளிகளில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சிகளை நடத்துதல்.
 • ஆவடியிலுள்ள அரசு பொது மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளின் தாய்மார்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
 • நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த  கழிப்பிட வசதிகளை வகை செய்வதற்கான பணிகளை மேற்கொள்ளுதல்.
 • நாசரேத் கல்லூரியில் 30000 மரக்கன்றுகளுடன் நாற்றுப்பண்ணை ஒன்று அமைக்கப்பட்டது , அம்மரக்கன்றுகள் ஆவடியிலுள்ள  பல்வேறு பகுதிகளில்  மறுநடவு செய்யப்படும்.

உங்களுடைய புரிந்துணர்வு மற்றும் ஆதரவு  ஆவடியை தூய்மையாகவும் பசுமையாகவும் நீண்ட காலத்திற்கு வாழ்வைக்கும் .