“கல்வி நமது எதிர்காலத்தைக் கட்டமைப்பதற்கான அடித்தளம்”

மாஃபா நிறுவனமானது, ‘திஷா ’ என்ற பெயரில் அதன் பல்வேறு திட்டங்கள் வாயிலாக, பல பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கையினை மாற்றியுள்ளது.

திஷா திட்டமானது, கல்வி அல்லது நிதியுதவி அளிப்பது மட்டுமின்றி, குழந்தைகள் அவர்களின் உண்மையான திறமையை அறியச் செய்வதற்கு உதவுவதன் வாயிலாக, அனைத்து நிலைகளிலும் அக் குழந்தைகள் முழுமையான வளர்ச்சியை அடையச் செய்வதை நோக்கமாக கொண்டிருக்கிறது.

திஷா படிப்புதவித்தொகைத் திட்டங்களானது, 4500க்கும் மேற்பட்ட தகுதியான மாணவர்களின் வாழ்க்கையினை மாற்றியுள்ளன. அவர்களில், பெரும்பாலானோர், பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர். இத்திட்டமானது, மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கிற தகுதியான மாணவர்களுக்கு எட்டாம் வகுப்பு முதல், பட்டப்படிப்பு வரை உதவி தொகையும் வழிகாட்டுதல்களும் அளிக்கப்படுகின்றன. திஷா திட்டமானது, திறன் கட்டமைப்பு வகுப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு கலந்தாலோசனை திட்டங்கள் வாயிலாக, வாழ்க்கைக்கு அவசியமான நிலைத்தன்மை மற்றும் தன்னம்பிக்கையை அளித்து, மாணவர்களுக்கு முழுமையான வளர்ச்சியினை வழங்குகிறது.

திஷா தலைமைப்பண்புத் திட்டமானது, வாழ்க்கைத் திறன்களையும் மதிப்புசார் கல்வியையும் கற்றுக்கொடுத்துள்ளது  பல்வேறு திட்டங்கள் மற்றும் தங்கும் முகாம்கள் வாயிலாக, இளைஞர்கள் நாளைய தலைவர்களாக மாற்றியுள்ளது. பல சாதனையாளர்களின் எழுச்சிமிக்க நல்ல உரைகளையும் வேலைவாய்ப்புசார்ந்த பயிற்சியும் இளைஞர்களை வெற்றிபெற்ற சாதனையாளர்களாகவும் நல்மனிதர்களாகவும் ஆக்குவதை நோக்கமாக கொண்டுள்ளன.

திஷாவின் நவரத்தினங்கள் என்பது, கல்வியில் பின்தங்கிய 8,9, மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களை, வழிகாட்டுதல் மற்றும் சிறப்பு வகுப்புத் திட்டங்கள் வாயிலாக மேம்படுத்துகின்ற ஒரு முயற்சியாகும். மாணவர்கள் 10ஆம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்று உயர்கல்வி அல்லது தொழிற்கல்வி பயிலச்செய்வதற்கு , தன்னம்பிக்கையை ஊட்டி, அக்கறையுடன் கற்பிப்பதை நோக்கமாக கொண்டிருக்கிறது. இத் திட்டம், 1000 க்கும் மேற்பட்ட மாணவர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது.

ஆவடியில் செயல்பாடுகள் :

 • மாணவர்களின் விரைவான மேம்பாட்டிற்காக உதவும்வகையில், ஆவடியிலுள்ள அரசுப் பள்ளிகளுடன் இணைந்து திறம்பட செயலாற்றுகிறது.
 • திஷா படிப்புதவித் தொகை திட்டத்தின் கீழ், தகுதியான 100 கல்லூரி மாணவர்கள் பயனடைந்தனர்.
 • பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கோடைகால முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
 • ஆவடியிலுள்ள 3 அரசுப் பள்ளிகளில் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டது. மாணவர்களிடையே, தன்னம்பிக்கை மற்றும் மொழித்திறமையில் குறிப்பிடதக்க முன்னேற்றம் காணப்படுகிறது.
 • இசை, ஓவியம், கலை, செய்தித்தாள் வாசித்தல் முதலியன பல்வேறு திட்டங்களின் வாயிலாக, மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு பங்களிக்கிறது.
 • பல்வேறு பயிற்சி மற்றும் மேம்பட்டுத் திட்டங்களின் வாயிலாக, 2325 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.
 • ஆவடி அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அறைகலன்கள் வழங்கப்பட்டுள்ளன.
  காமராஜர் நகர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கணிணிகள் வழங்கப்பட்டுள்ளன.
 • திஷாவின் நவரத்தின திட்டத்தின் வாயிலாக, கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
 • பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு, சத்தான சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
 • பாட்டா நிறுவனத்துடன் இணைந்து, 1800 மாணவர்களுக்கு காலணிகள் வழங்கப்பட்டுள்ளன.
 • கோடைகால முகாம்கள் நடத்தப்படுகின்றன.
 • வேலையில்லா இளைஞர்களுக்கு, பயிற்சியளித்து வேலைவாய்ப்பு வழங்கும் நோக்குடன், ‘ஸ்மார்ட் மையங்கள்’ தொடங்க டெக் மஹிந்த்ரா நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. இதுவரை, 25 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
  இத்தகைய தொடக்க முயற்சிகளை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்ல, உங்களின் ஆதரவை, நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம்.
  இதில், உங்களின் பங்களிப்பு, மதிப்புமிக்கதாகும்.

இத்தகைய தொடக்க முயற்சிகளை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்ல, உங்களின் ஆதரவை, நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம்.

இதில், உங்களின் பங்களிப்பு, மதிப்புமிக்கதாகும்.