‘அன்றாடம் ஏற்படுகின்ற சிறு முன்னேற்றமும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.’

“ஆவடி செயல்முறை திட்டம்” என்பது மாஃபாஅறக்கட்டளையின் ஒரு தொடக்க முயற்சியாகும். இது ஆவடியில் உள்ள மக்களின் அனைத்து விதமான முன்னேற்றத்திற்காக அனைத்து வகையிலும் பணியாற்றுவதைக் குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டது. இந்த முயற்சியின் நோக்கம் ஆவடி தொகுதி வாழ் மக்களின் நலனுக்கு தொண்டாற்றுவதேயாகும் .

ஆவடியிலுள்ள ஒவ்வொரு குடும்பங்களையும் அவர்களின் வறுமை நிலையை மாற்றி அமைத்து முன்னேற்றம் காணச் செய்வதற்கு , பல்வேறு அம்சங்களையும் முழுமையாக கண்டறிந்து அவசியமான சிறப்பான பணிகளைச் செய்வதே எங்களின் முழு முயற்சியாகும்.

மாஃபா அறக்கட்டளை 1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மாஃபா அறக்கட்டளையானது  ஆயிரக்கணக்கான பெரியோர் மற்றும் சிறார்களுக்கு கற்பதற்கும், வளர்ச்சியடைவதற்கும் நன்கு வாழவும் வழிவகை செய்துள்ளது. சமூகம் சார்ந்த அமைப்புகள் மற்றும் பெறுநிறுவனங்களின் கூட்டாண்மை வாயிலாக , பின் தங்கிய சமூகத்தினருக்கு கல்வி, பயிற்சி மற்றும் தொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல் போன்றவற்றை ஒருங்கிணைந்த ஆதரவு இந்த அமைப்பு வாயிலாக வழங்கி, அவர்களை பொருளாதாரரீதியாக தற்சார்புடையவர்களாக மாற்றமடையச் செய்வதே இந்த அறக்கட்டளையின் நோக்கமாகும்.

எங்கள் செயல்முறை திட்டம் :

ஆவடியில் உள்ள குடும்பங்களின் வளர்சிக்கு , அவரவர் தேவைக்கேற்ப, பல்வேறு முன்னேற்ற திட்டங்கள் வாயிலாக மேம்பாட்டு திட்டங்களை வழங்குதல்.

எங்கள் பயன்பாடுகள்

ஆவடி  செயல் முறைதிட்டமானது ,அதன் நோக்கத்தை அடைவதற்கு பின் வரும் கருத்துகளை வலியுறுத்துகிறது.

  • ஒளிவு மறைவின்மை
  • தகுதி
  • கூட்டாண்மை
  • கூர்ந்தறியும் திறன்
  • பரிவு