ஆரோக்கியமானவரிடம் தன்னம்பிக்கை இருக்கும், தன்னம்பிக்கையுடய ஒருவரிடம் அனைத்து குணநலன்களும் இருக்கும்.

சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு  விரிவான சுகாதார வசதிகளைப்  பேணுதலை மாஃபா நிறுவனம் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. சிறந்த உடல்நல சேவைகளுக்காக பணம் செலவழிக்க வழியில்லா  குழந்தைகளுக்கு மிகவும் தரமான, விரிவான மற்றும் தொடர்ச்சியான முறையில் சிகிச்சை அளித்து உடல்நலனைப் பேணுவதற்கு குழந்தைகள் நல மருத்துவர்கள். மருந்தாக்க நிறுவனங்கள், மற்றும் அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றுடன் நிறுவனம் இணைந்துள்ளது (ஏகாம் அறக்கட்டளை [EKAM FOUNDATION]). வறுமையில் வாடும் குழந்தைகளின் உடல்நலன் பற்றிய விவரங்களை சரியான முறையில், உடனடியாக பரிசோதித்து உறுதிப்படுத்துவதற்கு சென்னை மாநகரம் முழுவதிலுமிருந்து குழந்தைகள் நல மருத்துவர்களை மட்டுமல்ல, ஊட்டச்சத்து நிபுணர்கள், சமூகப் பணியாளர்கள் மற்றும் யோகாப் பயிற்சியாளர்கள் ஆகியோர்களையும் கொண்ட  வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆரம்ப சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கென்று மாஃபா நிறுவனம் தனியாகவும் சேவைபுரிந்து வருகிறது. மருத்துவ உதவி தேவைப்படும் மக்களுக்கு தரமான மருத்துவ வசதியை வழங்குவதற்கு,  மருத்துவ முகாம்களை ஒருங்கமைப்பதற்கும், அதனை நடத்துவதற்கும் இந்நிறுவனம் உள்ளூர் இளைஞர்களைப் பயிற்றுவித்து வருகிறது.

5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதற்கு 9 ஆரம்ப சுகாதார மையங்கள் ஆவடித் தொகுதியில் உள்ளன. அனைத்து 9 ஆரம்ப சுகாதார மையங்களுக்கும்  பல்வேறு வசதிகளுடன் உட்கட்டமைப்பு வசதிகளும் தேவைப்படுகின்றன. திருவேற்காடு மற்றும் ஆவடியில் வசிக்கும் அதிக அளவிலான மக்களுக்கு  சேவையளிப்பதற்கு, அவைகளை மேம்படுத்துவதற்கு ஏதுவாக, அத்தகைய 2 ஆரம்ப சுகாதார மையங்களை மாஃபா நிறுவனம் அடையாளம் கண்டறிந்துள்ளது. ஆவடித் தொகுதியில், சீரான கால இடைவெளிகளில், பொது மருத்துவ முகாம்கள், கண்  சிகிச்சைக்கான மருத்துவ முகாம்கள். பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் ஆகியவற்றை நடத்துவதற்கு மாஃபா நிறுவனம் உத்தேசித்துள்ளது

உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய நோய்களால் அவதியுறும் 14 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு ஏகாம் அறக்கட்டளை (EKAM FOUNDATION) மூலமாக உதவியளித்தல்.

சர்க்கரை நோய், சிறுநீரகக் கோளாறு, போலியோ ரூபெல்லா தடுப்பூசி, மற்றும் எளிதில் பரவகூடிய நோய்களான சிக்குன்குனியா, பறவைக் காய்ச்சல் (H1N1) போன்ற  பல்வேறு உடல் நலன் சார்ந்த விடயங்களுக்காக மருத்துவ விழிப்புணர்வு முகாம்களை நடத்துவது.

தற்போது இருக்கும் திருவேற்காடு மற்றும் ஆவடி மையங்களை தரம் உயர்த்திப் பேணுவது.

ஆவடியில் செயற்பாடுகள்

  • இரண்டு கண் மருத்துவ முகாம்கள் சங்கர நேத்ராலாயாவுடன் இணைந்து நடத்தப்பட்டு சுமார் 750 பொதுமக்கள் பயனடைந்தனர்.
  • ஆவடியிலுள்ள 450 குடியிருப்புவாசிகள் பயன்பெற்ற, பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. (அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து) பெண்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாம் மூலமாக 135 பெண்கள் பயன்பெற்றனர்.
  • ஆவடியில் பல்வேறு பள்ளிகளில் யோகா வகுப்புகள் நடத்தப்பட்டன. (நகராட்சி தொடக்கப் பள்ளி- தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், நகராட்சி தொடக்கப் பள்ளி-அண்ணனூர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி-காமராஜ் நகர், அரசு உயர் நிலைப்பள்ளி- தண்டுரை)
  • ஏகாம் அறக்கட்டளை (EKAM FOUNDATION)யின் நிலையான, திறன்மிகு ஆதரவுடன் 1500+ குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். மேலும் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடந்துள்ளன.

இத்தகைய நடவடிக்கைகளை மேலும் செம்மையாக செயல்படுத்துவதற்கு உங்களின் மகத்தான ஆதரவினை நாங்கள் கோருகிறோம்.